சின்னத்திரை ரசிகர்களிடம் மிகவும் வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் சீசன் தொடங்கியுள்ளது. முதல் சீசனை தொகுத்து வழங்கிய கமல்ஹாசனே இரண்டாவது சீசனையும் வழங்குகிறார். கடந்த சீசனில் ரசிகர்களிடம் அதிகம் வரவேற்பு பெற்றவ்ர் ஓவியா மட்டுமே. இந்த தொடரில் சிறப்பு விருந்தினராக அவர் மட்டுமே அழைக்கப்பட்டார்.

இந்த நிலையில் தற்போது ஓவியா டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்,பணமும் புகழும் நாம் எதிர்பார்த்தபடி அதிக மகிழ்ச்சியை தராது.மகிழ்ச்சியை தீர்மானிப்பது நமது மனம் தான்.பணத்துக்காகவும், புகழுக்காகவும் சண்டையிடுவதை நிறுத்திவிட்டு அன்பை பரப்புங்கள். அனைவரையும் நேசியுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.


பிக்பாஸ் வீஒட்டிற்கு சிறப்பு விருந்தினராக சென்றுவந்த நிலையில் இப்படி ஒரு பதிவை ஓவியா வெளியிட்டுள்ளார். எதற்காக இந்த பதிவை வெளியிட்டுள்ளார் என்று தெரியவில்லை. ஒரு வேலை கடந்த சீசனில் தான் பெற்ற அனுபவத்தை வைத்து இந்த பதிவை வெளியிட்டிருப்பாரோ?…