உடல் நிலைக் காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே சென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை ஓவியா இன்றைய நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசனுடன் கலந்து கொள்கிறார் என செய்திகள் வெளிவந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில், கடந்த சில நாட்களாக ஆரவ் மீது ஓவியா கொண்ட காதல் தொடர்பான காட்சிகளே அதிகம் காண்பிக்கப்பட்டது. அதேபோல், சமூக வலைத்தளங்களிலும் இதுபற்றி அதிகம் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக, நேற்று நீச்சல் குளத்தில் விழுந்து தற்கொலைக்கு முயன்றார் ஓவியா.

இதையடுத்து, அவரை தி. நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. அதன் பின் அவர் ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்பட்டது. இதையடுத்து, பல உளவியல் மற்றும் மனநல ஆலோசகர்கள் அவருக்கு ஆலோசனைகள் வழங்கியதாகவும், ஆனால், ஓவியாவிடம் எந்த முன்னேற்றமும் இல்லை எனக் கூறப்பட்டது. மேலும், அந்த நிகழ்ச்சிக்கு மீண்டும் செல்வதை அவர் விரும்பவில்லை எனக்கூறப்படுகிறது. அதோடு, அவருக்கு நெருக்கமான சில நலம் விரும்பிகளும் அவர் பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் செல்வதை விரும்பவில்லை எனத் தெரிகிறது.

எனவே, நிகழ்ச்சிக்கு குட்பை கூறும் மனநிலையில் இருக்கிறாராம் ஓவியா. ஆனால், இன்றைய நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசனுடன் அவர் தோன்றி, தன்னுடைய அனுபவங்களை அவர் பகிர்ந்துகொள்வார் எனக் கூறப்படுகிறது.