ஜி.வி.பிரகாஷினுடைய ‘சர்வம் தாளமயம்’ படத்தை இயக்கியுள்ளார் ராஜீவ் மேனன். இதற்கு முன்பு ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘மின்சார கனவு’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். பல வருடங்களுக்கு பிறகு இவர் இயக்கியுள்ள இப்படம் வெளியாவதற்கு முன்பே சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச திரைப்படவிழாவில் இடம்பெற்றது குறிப்படத்தக்கது.

இந்நிலையில், இப்படத்தினை லெஜன்ட் ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராம் பாராட்டி டிவிட் செய்துள்ளார். இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், ‘சர்வம் தாளமயம், இசை மனிதர்களின் வாழ்வியல் முறையோடு ஒன்றியிருப்பது ஆர்வத்தை அதிகரித்துள்ளது. ஜி.வி.பிரகாஷ், நீதுமுடிவேனு சிறந்த நடிப்பு. ராஜீவ்மேனன் மற்றும் படக்குழுவுக்கு வாழ்த்துகள்’ என பதிவிட்டுள்ளார்.

இப்படத்தினைத்தொடர்ந்து தற்போது, ஜி.வி.பிரகாஷ் ‘கீ’, ‘கொரில்லா’ , ‘ஜிப்ஸி’ உள்ளிட்ட பல படங்களில்படு பிஸியாக நடித்து வருகிறார்.