சிவகார்த்திகேயன் நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியிடபட்டுள்ளது .

 

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கும் ’மிஸ்டர் லோக்கல்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.இதில் அவருக்கு ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார்.’ஸ்டுடியோ க்ரீன்’ நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. வரும் மே 1 அன்று ’மிஸ்டர் லோக்கல்’  வெளியாக இருக்கிறது.

இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கும்  சயின்ஸ் பிக்ஸன் படத்தில் நடித்து வருகிறார்.இதில் அவருக்கு ஜோடியாக  ரகுல் ப்ரீத்சிங்  நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோ தயாரிக்கிறது.

இந்நிலையில் தற்போது விஷால் நடிப்பில் வெளியான ‘இரும்புத்திரை’ படத்தை இயக்கிய மித்ரன் இயக்கவிருக்கும் புதிய படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இன்று இப்படத்திற்கு பூஜை போடப்பட்டு ’ஹீரோ’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.இது நடிகர் சிவகார்த்திகேயனின் 15 வது படம் என்பது குறிப்பிடதக்கது.