தமிழன் சாதியால்தான் பிரிந்து கிடக்கிறான்: நினைவேந்தல் நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்ட பா.ரஞ்சித்

11:26 காலை

நீட் தேர்வால் மருத்துவப் படிப்பில் சேரமுடியவில்லையே என்ற மன உளைச்சலில், தனது உயிரை மாய்த்துக் கொண்ட அனிதாவுக்கு நினைவேந்தல் ஒன்றை தமிழ் திரைப்பட இயக்குனர்கள் ஒருங்கிணைந்து நடத்தினர். இதில் இயக்குனர்கள் சீனு ராமசாமி, அமீர், பா.ரஞ்சித், பிரம்மா, கார்த்திக் சுப்புராஜ், பாலாஜி சக்திவேல், மிஷ்கின், ராம்,  மீரா கதிரவன் உள்ளிட்ட பல இயக்குனர்களும் மேலும் பல உதவி இயக்குனர்களும் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.

Loading...

இந்த விழாவில், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் சேர்க்கையை நிறுத்திய வேலூர் சி.எம்.சி. கல்லூரி நிர்வாகத்துக்கு இயக்குனர் அமீர் நன்றி தெரிவித்து பேசினார். தொடர்ந்து அவர் பேசும்போது, ‘சாதிகள் தற்போது ஒழிந்து வருகின்றன. இதனால், சாதிகள் இல்லாத சமூகத்தை நாம் அடைந்து வருகிறோம். சாதிகளை கலைந்து தமிழராக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். தமிழன் என்பதில் நாம் பெருமிதம் கொள்வேன்’ என்று பேசினார்.

இவருடைய கருத்துக்கு மேடையில் இருந்த இயக்குனர் பா.இரஞ்சித் மறுப்பு தெரிவித்தார். உடனே, மைக்கை வாங்கி பேசிய அவர், சாதிகளற்ற சமூகம் இன்னும் இங்கு உருவாகவில்லை. ஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு சாதி இருக்கிறது. சாதி ஒழிந்திருக்கிறது என்று சொல்வது தவறு. இன்னும் எத்தனை வருடங்கள் இதையே சொல்லி பூச்சாண்டி காட்டுவீர்கள். தமிழ்… தமிழ்… என இன்னும் எவ்வளவு நாள்தான் பேசிக் கொண்டிருப்பீர்கள்? தமிழன் சாதியால் பிரிந்திருக்கிறான். முதலில் சாதி இருக்கிறது என்று ஒப்புக்கொள்ளுங்கள் என்று மேடையிலேயே கொந்தளித்தார்.

அவரை சமாதனப்படுத்தும் முயற்சியாக மேடையில் ஏறிய ராம், ரஞ்சித்தின் கோபம் நியாயமானதுதான். சினிமாவிலும் சாதி இருக்கிறது. இந்த நிலையை மாற்றுவோம் என்று பேசினார். இயக்குனர் ரஞ்சித் கடையாக, சாதியால் நமது சமூகம் பிரிந்து கிடக்கிறது. அதை சாதியற்ற சமூகமாக நாம் மாற்றவேண்டும் என்று கூறி மேடையிலிருந்து இறங்கினார். இப்படியாக அனிதாவுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சி சில கருத்து முரண்பாடுகளுடன் நடந்து முடிந்தது.

(Visited 16 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com