தீபிகா படுகோன் நடித்துள்ள பத்மாவத் படமானது பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. இந்த படமானது சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள உருவாகியுள்ள இதில் ஷாகித் கபூா், ரன்வீா் சிங் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார். இது ராஜ்புத்திர ராணி பத்மினியின் வரலாற்றை திரித்து எடுத்து இருப்பதாக அந்த ராஜபுத்திர சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனா். இந்த படம் தொடங்கியது முதல் படம் வெளியாகி வந்தது வரை தொடா்ந்து போரட்டங்களை நடத்தி வருகின்றனா். இதனால் சில இடங்களில் வன்முறையும் சம்பவமும் நடந்து வருகிறது. கலவரங்களும் நடந்து வருகிறது.

ஆனால் எந்தவித பாதிப்புமில்லாமல் இந்த பத்மாவத் படத்தை பாகிஸ்தானில் வௌயாகி உள்ளது. அந்த நாட்டில் எந்தவிதமான காட்சியும் வெட்டப்படாமல் தணிக்க குழு அனுமதிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நாடு முழுவதும் பத்மாவத் திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. இந்த படத்திற்கு எதிராக குஜராத், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பிகார் உள்ளிட்ட மாநிலங்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அதனால் திரையரங்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் வெளியாகி உள்ளது பற்றி அந்த நாட்டின் திரைப்பட தணிக்கை குழு வாரியத்தின் தலைவா் மொபாஷிர் ஹசன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பத்மாவத் திரைப்படத்துக்கு மத்திய வாரியம் அனுமதி அளித்துள்ளது. எந்த விதமான காட்சியும் நீக்கப்படாமல், யு சான்றிதழ் அளித்துள்ளோம். மேலும் இந்த படத்திற்கு சான்று அளிக்கும் முன் பாகிஸ்தான் திரைப்பட தணிக்கை குழு அதிகாரிகள், இஸ்லாமாபாதில் உள்ள குவாதி இ ஆசம் பல்கலையின் வரலாற்றுப் போராசிரியா் வக்கார் அலி ஷாவிடம் கருத்துக்களை கேட்டு,அதன் பின் இந்த படத்தில் வரலாற்று திரிபு ஏதும் இருக்கிறதா என கேட்டு அறிந்து கொண்ட பின்பு தான் முடிவு செய்தனா் என தணிக்கை வாரிய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.