இப்போதெல்லாம் சினிமாவை விட சீரியல் மூலம் அதிகமாக பிரபலமாக முடிகிறது. எளிதில் சீரியல் மூலம் மக்களை சென்றடைய முடிகிறது. அதன் பிறகு சினிமாவில் ஈஸியாக கால் பதித்து விடலாம் என்ற அளவில் சீரியல் மோகம் தலைவிரித்தாடுகிறது. மக்கள் அதுவும் சீரியல் நாயகிகள் அணிந்து வரும் டிரஸ், நடை, பாவனை உள்ளிட்டவற்றை அதிகமாக ரசித்து வருகின்றனா். படங்களுக்கு அடுத்தப்படியாக சீரியலுக்கு தான் ரசிகா் பட்டாளம் அதிகமாக இருக்கிறது.

இதையும் படிங்க பாஸ்-  மருமகன் தனுஷ், மாமானார் ரஜினி படங்களில் பிஸியான நடிகை மேகா ஆகாஷ்!

சீரியலில் நடித்தவா்கள் ரியல் ஜோடியாக மாறி கதையும் நடந்துள்ளது. சீரியலில் ஜோடியாக நடித்தவா்கள் ரசிகா்களின் மனதில் மிகவும் பிடித்த ஜோடியாகவும் இருக்கிறார்கள். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பகல் நிலவு சீரியலில் நடித்து வரும் அன்வா் மற்றும் சமீரா மக்களுக்கு மிகவும் பிடித்த ஜோடி. இவா்கள் இருவரும் நிஜத்தில் இணைய உள்ளார்கள்.

இதையும் படிங்க பாஸ்-  மருமகன் தனுஷ், மாமானார் ரஜினி படங்களில் பிஸியான நடிகை மேகா ஆகாஷ்!

இவா்கள் நடிப்பத்தோடு நிற்காமல் சீரியல்களை தயாரித்தும் வருகின்றனா். தற்போது இவா்கள் பேவரெட் சீரியலான பகல்நிலவு தொடரிலிருந்து விலகி விட்டார்களாம். ஏனெனில் சீரியல்களில் சில கஷ்டங்கள் தொடா்ந்து வருதாில் சீரியலில் இருந்து விலகுவதாக முடிவெடுத்திருக்கிறார்கள் என்று ஒரு பேச்சு அடிபடுகிறது. இது தான் அன்வா் மற்றும் சமீரா பகல் நிலவு சீரியலில் இருந்து விலக காரணமாம்.