மாணவி சோபியா கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் வருகின்றன. அவர் ஜாமீனில் வெளியே வந்தாலும் இந்த விவகாரம் உலக நாடுகள் கவனத்தைக்கூட ஈர்த்துள்ளது. பாகிஸ்தான் ஊடகவியலாளர் ஹமித் மிர் இது தொடர்பாக தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

சோபியா விமானத்தில் கூச்சலிட்டுது தவறு என கூறினாலும், அவரை சிறையில் அடைக்கும் அளவுக்கு அவர் குற்றம் செய்யவில்லை. ஒரு மாணவியை பாஜகவுக்கு எதிராக கூச்சலிட்டதற்காக கைது செய்து 15 நாட்கள் சிறையில் அடையுங்கள் என உத்தரவிட்டது மிகப்பெரிய தவறு என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவர் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடித்தக்கது.

முன்னதாக மாணவி சோபியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது தேசிய ஊடகங்கள் வரை செய்தி வெளியிட்டது. இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த பிரபல ஊடகவியலாளர் ஹமித் மிர் இது தொடர்பாக தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், எங்கள் சர்வாதிகாரி உங்கள் தேர்ந்தடுக்கப்பட்ட பிரதமரைவிட எவ்வளவு பரவாயில்லை. பர்வேஸ் முஷரஃப் ஒரு பாசிஸ்ட் என நான் பலமுறை கூறியிருக்கிறேன். இதற்காக அவர் என்னை தொலைக்காட்சியில் இருந்து முடக்கினார். ஆனால் ஒருமுறை கூட அவர் என்னை கைது செய்யவில்லை. ஆனால் இந்திய ஜனநாயக அரசு ஒரு மாணவி மோடியை பாசிஸ்ட் என கூறியதற்காக கைது செய்துள்ளது என கூறியுள்ளார். இது பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.