தமிழில் சண்டக்கோழி 2 வாக வரும் படம் தெலுங்கில் பாண்டெம் கோடி என்ற பெயரில் வெளியாகிறது. தமிழைப்போலவே தெலுங்கிலும் விஷாலுக்கு மார்க்கெட் உள்ளது குறிப்பிடத்தக்கது.

லிங்குசாமியின் முந்தைய படங்களும் தெலுங்கில் வந்து வெற்றி பெற்றுள்ளது. விஷாலின் இரும்புத்திரை கூட சமீபத்தில் தெலுங்கிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

சண்டைக்காட்சிகள் நிறைந்த படங்களை தெலுங்கு ரசிகர்கள் அதிகம் விரும்புவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விசயமாகும்.

பல விசயங்களை அடிப்படையாக வைத்து பாண்டெம் கோடி2 என்ற பெயரில் தெலுங்கிலும்  ரிலீசுக்கு தயாராக இருக்கும் இப்படத்தின் ப்ரோமஷன் விழாக்கள், பிரஸ் மீட் என இந்த சண்டக்கோழி 2 டீம் மிகுந்த உற்சாகத்தில் உள்ளது.

சமீபத்தில் இந்த படத்திற்கான அனைத்து ப்ரமோஷன் விழாக்களும் ஐதராபாத்தில் தெலுங்கு ரசிகர்களுக்காக நடந்தேறியுள்ளது.