கமல்ஹாசன், கெளதமி நடித்த ‘பாபநாசம்’ திரைப்படத்தில் கமல்ஹாசனின் இரண்டாவது மகளாகநடித்த குட்டிப்பாப்பா எஸ்தரை யாரும் மறந்திருக்க முடியாது. போலீஸ் விசாரணை காட்சியின்போது அற்புதமாக எஸ்தர் நடித்திருப்பார்

இந்த நிலையில் தற்போது எஸ்தர் நன்றாக வளர்ந்து கதாநாயகியாக நடிக்கும் அளவுக்கு அழகிய தோற்றத்தை கொண்டுள்ளார். சமீபத்தில் எஸ்தர் தனது புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார். இந்த புகைப்படத்தினால் இவருக்கு ஒரு மலையாள பட வாய்ப்பு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே சமீபத்தில் ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரமும் பெரிய பெண்ணாக வளர்ந்து விரைவில் நாயகியாக நடிக்கவுள்ளார் என்ற செய்தியை பார்த்தோம்