Paramapadham Vilayattu – திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள பரமபதம் விளையாட்டு படத்தின் டிரெய்லர் வீடியோ அவரின் பிறந்த நாளான இன்று வெளியிடப்பட்டுள்ளது.

சினிமா துறையில் நுழைந்து 20 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், திரிஷாவின் 60வது படமாக பரமபதம் விளையாட்டு படம் அமைந்துள்ளது. இப்படம் அரசியல் திரில்லராக உருவாகியுள்ளது.

இப்படத்தின் டிரெய்லர் வீடியோவை நடிகர் விஜய் சேதுபதி இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.