திமுக ஆட்சியில் முன்னணி தலைவராக விளங்கியவர் பரிதி இளம் வழுதி. பல முறை திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தார். 1984ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை 28 ஆண்டுகள் திமுகவில் இருந்தார் ., 6முறை எம்.எல்.ஏவாக இருந்தவர்

1996 முதல் 2001ம் ஆண்டு வரை பேரவைத் துணைத் தலைவராக இருந்த அவர், 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

திமுகவில் ஏற்பட்ட மனவருத்தம் காரணமாக திமுகவில் இருந்து விலகிய பரிதி இளம்வழுதி, கடந்த 2013ம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.

சமீபகாலமாக தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் முக்கிய பொறுப்பு வகித்து வந்தார்.

இந்நிலையில் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதி மாரடைப்பால் காலமானார்.