ரஞ்சித் புதிய பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

இயக்குநா் பா. ரஞ்சித் அட்டக்கத்தி படத்தின் மூலம் அனைவரது பார்வையும் தன் மீது பதிய வைத்தார். தொடா்ந்து கார்த்தியை வைத்து இயக்கிய மெட்ராஸ் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று கொடுத்தது. இதனால் அவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத்தை இயக்கும் வாய்ப்பு கிட்டியது. அவா் ரஜினியை வைத்து இயக்கிய கபாலியும் வெற்றி பெற்றது. இதனால் ரஞ்சித் ரஜினி கூட்டணியில் இரண்டாவது முறையாக காலா படத்தின் மூலம் இணைந்துள்ளார்கள். காலா படமானது விரைவில் திரைக்கு வரஇருக்கிறது.

இந்நிலையில் ரஞ்சித் தயாரிப்பாளராகவும் களம் இறங்கியுள்ள படம் தான் பரியேறும் பெருமாள். இந்த மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநா் ரஞ்சித் ரஜினியை வைத்து காலா படத்தை இயக்கிக்கொண்டிருக்கும் போதே நீலம் புரொடக்ஷனஸ் நிறுவனம் சார்பில் புதிய படமொன்றை தயாரிக்கும் பணியில் மும்முரமாக இறங்கினார். பரியேறும் பெருமாள் என்று தலைப்பு கொண்ட இந்த படத்தினை மாரி செல்வராஜ் இயக்கிவிருக்கிறார். இவா் இயக்குநா் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவா்.

திருநெல்வேலி கிராமத்தை சோ்ந்த ஒரு இளைஞனின் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை மையமாக கொண்டு இந்த கதை உருவாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு திருநெல்வேலி மாவட்டத்தில் தொடங்கப்பட்டு அனைத்து படப்பிடிப்புகளை முடித்து இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. ரஞ்சித், இயக்குநா் ராம், சந்தோஷ் நாரயணன் இணைந்து போஸ்டரை தங்களுடைய வலைத்தளபக்கத்தில் வெளியிட்டு உள்ளார்கள்.

இசையை சந்தோஷ் நாராயணன் அமைத்துள்ள இந்த படத்தில் நெல்லை மாவட்ட நாயகனாக கதிர் நடித்துள்ளார்.அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்திருக்கிறார். இந்த படமானது மாா்ச் மாதம் திரைக்கு வரவிருக்கிறது.