பா.ரஞ்சத்தின் ‘நீலம் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம்
தயாரிப்பில், மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கதிர், ஆனந்தி,
யோகிபாபு, லிங்கேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம்
‘பரியேறும் பெருமாள்’.

இப்படத்தினை தணிக்கைக் குழு தணிக்கை செய்து “யு”
சான்றிதழ் வழங்கியுள்ளது. வருகிற 28-ஆம் தேதி இப்படம்
வெளியாக உள்ளது.

இந்நிலையில், தணிக்கைச் சான்றிதழுக்காக
அனுப்பப்பட்ட இப்படத்தை பாா்த்த அதிகாாிகள்,
படக்குழுவினரை அழைத்து வெகுவாக பாராட்டியுள்ளனா்.

படத்தின் எந்த பகுதியிலும் கட் செய்ய வேண்டிய
அவசியம் இல்லை. குடும்பத்தோடு அனைவரும் பாா்க்கக்
கூடிய வகையில் படம் அமைந்துள்ளது. நல்ல படம்
எடுத்திருப்பதாக தொிவித்துள்ள அதிகாாிகள் 2
இடங்களில் மட்டும் மியூட் செய்யுமாறு கூறி படத்திற்கு ‘யு’
சான்றிதழ் வழங்கியுள்ளனர்.