மாரி செல்வராஜ் இயக்கத்தில், இயக்குனர் பா.ரஞ்சத்தின் ‘நீலம் புரொடக்ஷன்ஸ்’ தயாரிப்பில் கதிர், ஆனந்தி நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்த படம் ‘பரியேறும் பெருமாள்’.

இந்த படம், சில திரையங்குகளில் மட்டுமே வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிருந்த நிலையில், விமர்சர்கள், ரசிகர்கள் மத்தியில் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதனிடையே கடந்தவாரம் ‘செக்கச் சிவந்த வானம்’ படம் வெளியானதால் குறைந்தளவு திரையங்குகளே ‘பரியேறும் பெருமாள்’ படத்திற்கு கிடைத்தது.

இந்நிலையில் ‘பரியேறும் பெருமாள்’ படத்திற்கான ஆதரவு, நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், நிறைய திரையரங்குகளில் இப்படத்தை வெளியிட வேண்டும் என ரசிகர்கள் பலர் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

இதனால் சில திரையரங்குகளில் மட்டுமே ஓடிக்கொண்டிருந்த இப்படமானது, ரசிகர்களிடம் கிடைத்து வரும் ஆதரவால் இன்று பெரும்பாலான திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

https://twitter.com/officialneelam/status/1046291283499601921