Oththa Seruppu – பார்த்திபன் இயக்கி நடித்துள்ள ஒத்த செருப்பு திரைப்படம் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.

எதையும் வித்தியாசமான கோணத்தில் யோசிக்கும் பார்த்திபன், வித்தியாசத்திற்கென்றே ரசிகர்களிடம் பெயர் பெற்றவர். ஆனால், சில சமயம் வித்தியாசம் என்கிற பெயரில் அவர் எடுக்கும் திரைப்படம் ரசிகர்களை கவராமல் போய்விடுவதுண்டு. குடைக்குள் மழை திரைப்படம் அதற்கு முக்கிய சாட்சி. அப்படம் ரசிகர்களை கவராததால் வெற்றி அடையவில்லை. இப்படம் பார்த்திபனுக்கும் பெரும் நஷ்டத்தை கொடுத்தது.

அப்படத்தில் படம் முழுக்க பார்த்திபனே பேசிக்கொண்டிருப்பார். அவரை தாண்டி ஒரு சில கதாபாத்திரங்கள் மட்டுமே திரையில் வருவார்கள். தற்போது அவர் இயக்கி முடித்துள்ள ஒத்த செருப்பு திரைப்படத்திலும் அவர் ஒருவர் மட்டுமே நடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

எனவே, பார்த்திபன் மீண்டும் ரிஸ்க் எடுக்கிறார் என கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள். அவர் இயக்கிய கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் திரைப்படம் கூட வித்தியாசமான கோணத்தில் சொல்லப்பட்ட ஒரு படம்தான். ஆனால், ரசிகர்கள் அதை வெற்றி அடைய செய்தனர். அதுபோலவே, ஒத்த செருப்பு திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெறும் என வாழ்த்துவோம்…