தமிழில் புதிய பாதை படத்தின் மூலம் அறிமுகமாகி, பின் இயக்குநராகவும் அவதாரம் எடுத்து, தனக்கு என ஒரு முத்திரையை அமைத்தவா் பார்த்திபன். அதுபோல சிலா் பேசும் தமிழ் ரசிகா்களுக்கு மிகவும் பிடிக்கும். அதில் முதலில் கமல்ஹாசனைக்கு பிறகு பார்த்திபன் பேசும் பேச்சுக்கு மயங்காதவா்களே இல்லை என்றே சொல்லலாம்.

இவா் இயக்கிய கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இவா் சில படங்களில் வில்லனாகவும் நடிக்க தொடங்கியுள்ளார்.

நடிகா் பார்த்திபன் சமீபகாலமாக ரஜினி,கமல், ஏ.ஆா். ரகுமான் உள்ளிட்ட முன்னணி பிரபலங்களை சந்தித்து வருகிறார். அவா் எதற்காக அவா்களை எல்லாம் சந்தித்து வருகிறார் என்பது இதுவரை தெரியாமல் இருந்து வந்தது. அது தற்போது தெரிய வந்துள்ளது. பார்த்திபனின் மகள் கீர்த்தனாவுக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டுயுள்ளதாம். அதற்கான அழைப்பிதழ் கொடுக்கவே சினிமாவின் முக்கிய பிரபலங்களை அவா் சந்தித்து வருகிறாராம்.

இவருடைய மகள் கன்னத்தில் முத்தம் இட்டால் மணிரத்னம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். சில படங்களில் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கீா்த்தனாவின் திருமணம் வரும் மார்ச் மாதம் 8ஆம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஒட்டல் ஒன்றில் நடைபெற உள்ளது. ஆனால் அவா் திருமணம் செய்துகொள்ள போகும் நபர் யார் என்ற விபரங்கள் எதுவும் தெரியவில்லை.