பிரபல இயக்குனரும் நடிகருமான R.பார்த்திபன்  ட்விட்டரில் மிகவும் ஆவேசமான ஒரு கருத்தினை பதிவு செய்துள்ளார்.

அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்த ஒரு காது கேட்காத பெண்ணை 22 பேர் பல மாதங்களாக பாலியல் துன்புறுத்தல் செய்து வந்திருந்தது தெரியவந்துள்ளது. அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தும்போது சட்டம் பயிலும் மாணவர்களே தர்மஅடி கொடுத்தனர்.

இது பற்றி பார்த்திபன் உணர்ச்சி கொப்பளிக்கும் வகையில் டுவிட் செய்துள்ளார். சிறு குழந்தைகள் மீதான”பாலியல் வன்கொடுமை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது இந்த மிருகங்களை கண்டறிந்து அறுக்க வேண்டும் என்று எழுதியுள்ளார்.