மெர்சல் பட விழா பேச்சு ; நான் காசுக்கு மாரடிக்கவில்லை – பார்த்திபன் விளக்கம்

06:00 மணி

நடிகர் விஜய் நடித்த மெர்சல் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் பார்த்திபன், விஜயை மிகவும் புகழ்ந்து பேசினார். விஜய்தான் Best CM-னு அமெரிக்க அதிபர் டிரம்பே விரைவில்  டிவிட் செய்வார் – CM எனில் கலெக்‌ஷன் மன்னன் என ஏகத்துக்கும் பாராட்டினார்.

இதையடுத்து சமூக வலைத்தளங்களில் ‘கொடுத்த காசுக்கு மேல கூவறாரு’ என அவரை கிண்டலடித்தனர். அதற்கு தனது சமூக வலைத்தள பக்கங்களில் அவர் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

காசுக்கு மாரடிக்காத Mass-ஆன பேச்சுக்கு
மாசு நிறைந்த ஏச்சுக்கு ஆளானது இதுவே முதன்முறை!
வாயார/மனதார வாழ்த்துவது என் மேடை நாகரீகம்.
அவர் அழைத்தாலும் தலை நிமிர இப்படி சொல்வேன்.

“வேகத்தை விட விவேகம் பெருசு
ஆனா விவேகத்தை விட  அஜீத்தே பெருசு!”-
நான் கலைஞர்கள் அனைவருக்கும் நண்பன்.
ஆனால் சினிமாவுக்கு மட்டுமே ரசிகன்.
‘ஆளப்போறான்(?)சிறந்த(?)மனிதன்(?)
வாழப்போறான் விவசாயி’-அதுவே

நம்பிக்கை நிறைந்த என் பேச்சின் மெரஸலான மெசேஜ்!”
என அவர் குறிப்பிட்டுள்ளார்.

The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com