இளையராஜா 75 நிகழ்ச்சிகளை நடத்து முயற்சியில் இருந்த போது விஷாலின் வலது கரங்களான நந்தாவும், ரமணாவும் தன்னை அவமானப்படுத்தி விட்டதாக பார்த்திபன் தெரிவித்தார்.

திடீரென தயாரிப்பாளர் சங்கத்துக்கு துணை தலைவராக பார்த்திபன் நியமிக்கப்பட்டார். மேலும், இளையராஜா 75 நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், இளையராஜா நிகழ்ச்சி நடந்த போது அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. அதை விட முக்கியமாக, நிகழ்ச்சிக்கு ஒரு நாள் முன்பே அவர் தனது துணை தலைவர் பதவியையும் ராஜினாமா செய்துவிட்டார். இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக பிரபல இணையதளத்துக்கு பார்த்திபன் அளித்த பேட்டியில் கூறியதாவது:

இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு நான் இயக்குனராக இருந்தேன். ஆனால், அனைத்து முடிவுகளையும், விஷாலின் வலது கரங்களாக விளங்கும் நந்தாவும், ரமணாவும் எடுத்தனர். நான் கொடுத்த ஐடியா எதுவும் பின்பற்றப்படவில்லை. அது எனக்கு அவமானமாக இருந்தது. பல இடங்களில் என் மூக்கை உடைத்தனர். எனவேதான், அந்த நிகழ்ச்சிக்கு நான் இயக்குனர் இல்லை என விஷாலிடம் கூறிவிட்டு வெளியேறினேன்.

இளையராஜா போன்ற மேதைக்கு நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சி படுசொதப்பலாக இருந்தது. இதை விட முக்கியம் என்னவெனில், என்னை விஷால் அழைத்து பேசவும் இல்லை. எனக்கு என்ன பிரச்சனை என விசாரிக்கவும் இல்லை என ஆதங்கத்துடன் பார்த்திபன் பேட்டி கொடுத்துள்ளார்.