வெங்கட் பிரபு இயக்கியத்தில் வெளிவந்த ‘சென்னை28 – II’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும்படம் ‘பார்ட்டி’.

இந்த படத்தில் ‘கயல்’ சந்திரன், நிவேதா பெத்துராஜ், சத்யராஜ், ஜெயராம், ஜெய், ரம்யா கிருஷ்ணன் உள்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்டர் லுக், செகண்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் ரசிகர்ளிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

முதன் முதலாக பிரேம்ஜி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தற்போது ‘பார்ட்டி’ படத்தின் ‘சச்ச சச்ச சாரே’ என தொடங்கும் விடியோ பாடல் வைரலாகி வருகிறது.