கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் ஜாதியை பெயருக்கு பின்னால் போடுவது குறித்த விவாதம் நடந்தது.

இதில் இயக்குனர் கரு.பழனியப்பன், நடிகை பார்வதிநாயர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பார்வதி நாயர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்தை மட்டும் ஒளிபரப்பிவிட்டு, அவர் ஜாதி எதிர்ப்புக்கு கூறிய கருத்துக்களை எல்லாம் எடிட் செய்துவிட்டதாக நடிகை பார்வதி நாயர் குற்றஞ்சாட்டியுள்ளார்/

அதேபோல் இயக்குனர் கரு.பழனியப்பன் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்களை எடிட் செய்துவிட்டு பார்வதி நாயர் குறித்து விமர்சனம் செய்த கருத்துக்களை மட்டும் ஒளிபரப்பு செய்து தனக்கு துரோகம் செய்துவிட்டதாக பார்வதிநாயர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்