தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்றது. அதில் சிலருக்கு மட்டுமே ஜனாதிபதி விருது வழங்கினார். மீதி பேருக்கு மத்திய மந்திரிகள் வழங்குவார்கள் என அறிவிக்கப்பட்டது. இது சர்ச்சையில் முடிந்தது. மீதி இருந்தவா்கள் அந்த விழாவை புறக்கணித்தனர். இந்நிலையில் மரியான் படத்தில் தனுசுடன் நடித்த மலையாள நடிகர் பார்வதி மேனன் ஜனாதிபதி கையால் விருது வழங்க முடியாதது மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளதாக கூறியுள்ளார்.

தேசிய திரைப்பட விருது விழா டெல்லயில் நடைபெற்றது. அந்த விழாவானது சா்ச்சையில் முடிந்தது. தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ள பார்வதி டேக் ஆப் என்ற மலையாள படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அதுபோல சிறந்த இசையமைப்பாளர் விருது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், சிறந்த பாடகர் விருது யேசுதாஸ், பாகுபலி, மாம் படத்திற்கு நடித்த ஸ்ரீதேவி உள்ளிட்ட பலருக்கும் விருது அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஜனாதிபதி 12 பேருக்கு மட்டுமே விருது வழங்கினார். மற்ற கலைஞா்களுக்கு மத்திய மந்திரிகள் ஸ்மிரிதி இராணி, ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் ஆகியோர் வழங்குவார்கள் என அறிவிக்கப்பட்டதால் அந்த விழாவை 70 மேற்பட்ட கலைஞர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.

டேக் ஆப் என்ற மலையாள படத்தில் நடித்த பார்வதிக்கு சிறந்த நடிகை என அறிவிக்கபட்டு இருந்தது, அதனால் விருது விழாவிற்கு டெல்லி செ்னற நடிகை பார்வதிக்கு ஜனாதிபதியிடமிருந்து விருது பெற முடியாதது ஏமாற்றத்தை அளித்தது என்று கூறினார். முதன் முதலில் தேசிய விருது பெறுபவா்கள் ஜனாதிபதி கையால் வழங்குவதை தான் விரும்புவார்கள். அது தான் கவுரவம். ஆசையுடன் வந்தவா்களுக்கு இது ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஜனாதிபதியிடமிருந்து விருது பெற முடியாதது பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியிருக்கிறார் நடிகை பார்வதி.