பவர்ஸ்டார் பவன்கல்யாண் நடித்த ‘அஞ்ஞாதவாசம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்திற்கு வெளிநாடுகளில் இருந்து நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது.

இந்த படத்தை பார்த்த ஒரு ரசிகர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டபோது, ‘பவன்கல்யாணை இயக்குனர் வேஸ்ட் செய்துவிட்டார். ஒரு காட்சி கூட புதுமையாக இல்லை. கீர்த்திசுரேஷ் கேரக்டரில் முக்கியத்துமே இல்லை. அனிருத்தின் இசையிலும் ஏமாற்றம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ரிலீசுக்கு முன்னர் ரிசர்வேஷனில் மட்டும் ஒரு மில்லியன் டாலர் வசூல் என்ற மைல்கல்லை எட்டிய இந்த படம் இனிவரும் நாட்களில் எதிர்பார்த்த வசூலை பெறாது என்று கூறப்படுகிறது.