அனிருத் இசையில் பாடும் பவர்ஸ்டார்….

தெலுங்கில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ள ஒரு புதிய படத்தில், பவர்ஸ்டார் பவன் கல்யாண் ஒரு பாடலை பாட இருக்கிறார் என செய்திகள் வெளிவந்துள்ளது.

தமிழில் பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்தவர் அனிருத். முக்கியமாக, நடிகர் தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோர்களின் பெரும்பாலான படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளர். இவரது இசையில், தனுஷ், சிவகார்த்திகேயென், விஜய் ஆகியோர் ஏற்கனவே சில பாடல்களை பாடியுள்ளனர்.

இந்நிலையில், தெலுங்கில் பிரபல இயக்குனர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கும் புதிய படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அதில், பவர்ஸ்டார் பவர் கல்யாண் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தில், அனிருத் இசையில் பவன் கல்யாண் ஒரு பாடலை பாட இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே வேறொருவரின் இசையில் கல்யாண் ஒரு பாடல் பாடியுள்ளார். அனிருத் இசையில் அவருக்கு இது 2வது பாடலாகும்.