தெலுங்கு நடிகர் பவன் கல்யாண்  வரும் சட்ட மன்ற தேர்தலில் முதல்வர் பதவிக்கு போட்டியிட போவதாக கூறியுள்ளார்.

 

தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் பவன் கல்யாண்.இவர் கடந்த 2014 ல் ஜன சேனா கட்சியை தொடங்கி தலைவராக பொறுப்பேற்றார்.அண்மையில் சென்னை வந்த இவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

இதையும் படிங்க பாஸ்-  பேட்ட படம் பாத்துட்டு காண்டான விஜய் ரசிகர்கள்! அப்படி என்ன ஆச்சு?

அந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய பவன் கல்யாண், தென் மாநிலங்களுக்கு தனியாக ஒரு தலைநகரம் வேண்டும். மத்தியில் ஆளும் பா.ஜா.க மற்றும் காங்கிரஸ் அரசுகள் தென்னிந்திய மாநிலங்களை கடந்த 20 வருடங்களாக புறக்கணித்து வருகின்றன.

இதையும் படிங்க பாஸ்-  ரஜினிக்கு அடுத்த இடத்தை பிடித்து விஜய்யை பின்னுக்கு தள்ளிய நயன்தாரா

கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தேன். ஆனால், இப்போது அந்தக் கட்சியின் செயல்பாடுகள் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் போன்ற கட்சிகள் மத்திய அரசிடம் சரியாக முறையிடுவதில்லை.

இதையும் படிங்க பாஸ்-  அஜித் இப்படி இருப்பதற்கு ரஜினியே காரணம்....

நடிகராக இருக்கும் ஒருவர் மக்களின் நம்பிக்கையைப் பெற நிறைய உழைக்க வேண்டும். தேவைப்பட்டால் ரஜினி அல்லது கமலுடன் இணைந்து செயல்படுவேன்.

ஆனால், அப்படி ஒரு நிலை ஏற்படாது. 2019 தேர்தலில் நான் ஆந்திர முதல்வர் பதவிக்குப் போட்டியிடுவேன்,” என தெரிவித்தார் பவன் கல்யாண்.