ஆம்பூர் அருகே இறந்த குரங்கிற்கு பொதுமக்கள் இறுதிச்சடங்கு செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய காலக்கட்டத்தில் ரோட்டில் யாராவது அடிப்பட்டு கிடந்தாலே பலர் கண்டும் காணாமலுமாய் தான் செல்கின்றனர்.  நமக்கு எதுக்குப் பா வம்பு என்றே பலர் கடந்து செல்கின்றனர். அப்படி இருக்கும் வேளையில் ஆம்பூரில் மக்கள் இறந்த குரங்கிற்கு இறுதிச்ச்சடங்கு செய்த சம்பவம் பிரம்மிக்க வைக்கிறது.

இதையும் படிங்க பாஸ்-  விழுந்த தென்னை மரத்தை தூக்கவே ரூ.2000 அரசு தருவதோ ரூ.1100 - புலம்பும் விவசாயிகள்

ஆம்பூர் அருகே மிட்டாளம் ஊராட்சியில் குரங்கு ஒன்று மின்சாரம் பாய்ந்து பரிதபமாக உயிரிழந்தது. இதனைக்கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அப்பகுதி மக்கள் எல்லாம் சேர்ந்து குரங்கிற்கு இறுதி மரியாதை செய்து அதனை நல்லடக்கம் செய்தனர். இந்த புகைப்படமானது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பலர் அந்த ஊர் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.