இன்று காலை சென்னையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இன்று காலை 7 மணியளவில் சென்னையில் சில பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் காட்டிங்கள் அதிர்ந்ததாக கூறப்படுகிறது. தி.நகர் பகுதியில் பலரும் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக கூறினார். அந்த பகுதியில் ஏராளமான பெரிய வணிக கட்டிங்கள் இருப்பதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இது தொடர்பான தகவல் வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவியது. இது சுனாமி எச்சரிக்கை என்றும் சிலர் தகவல்களை பரப்ப தொடங்கினர்.

இந்நிலையில், சென்னையின் வட கிழக்கே வங்க கடலின் அடியில் 4.9 ரிக்டர் அளவு நில நடுக்கம் பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது. இதனால்தான் நில நடுக்கம் ஏற்பட்டிருப்பதாக கருதப்படுகிறது. இதனால், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும், சென்னை வாசிகள் பதட்டம் அடைந்துள்ளனர்.