• விஜய் படங்கள் என்றாலே ரிலீஸ் ஆவதற்குள் ஒரு பெரிய போராட்டமே நடந்துதான் வெளிவரும்.காரணம் அவர் மீதான அரசியல் எதிர்பார்ப்பே என்பது நம் அனைவருக்கும் தெரியும். சமீப ஆண்டுகளாக விஜய் படங்கள் சந்திக்கும் பிரச்சனைகள் அளவிற்கு வேறு எந்த நடிகரின் படங்களும் சந்தித்ததாக தெரியவில்லை.
  • இந்த நிலையில் விஜய் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. இந்த போஸ்டரில் விஜய் புகைபிடிப்பது போன்று வெளியானது. இது போதாதா போராட்டக் காரர்களுக்கு. கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தனர். இறுதியாக அந்த ஸ்டில்லை வாபஸ் பெற்றனர் சன் பிச்சர்ஸ்.
  • விஜய்க்கு எதிரான போராட்டங்களை பார்த்த மக்கள் தற்போது அவருக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து கருத்து கூறிய சிலர், புகைப்பிடிப்பதுதான் பிரச்சனை என்றால் சிகரெட் கம்பெனிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே? என்றும், விஜய் எவ்வளவோ நல்லது செய்திருக்கிறார். அப்போது பாராட்ட தவறிய நீங்கள் இப்போது எதிர்க்க எந்த தகுதியும் உங்கள் இல்லை என்றும் கூறுகின்றனர். இவர்கள் கேட்பதிலும் ஒரு நியாயம் இருக்கதேனே செய்கிறது?