இதுவரை இல்லாத அளவிற்கு நாட்டில் பெட்ரோல் டீசல் விலை மிகக்கடுமையாக உயர்ந்து வருகிறது. வாகன ஓட்டிகள் உட்பட பொதுமக்கள் அனைவரும் இதனால் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகிறனர். இந்நிலையில் தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு 83 ரூபாயைத் தாட்டியுள்ளது.

இந்நிலையில் இந்த பெட்ரோல் விலை மோடி அரசின் ஆட்சியில் விரைவில் 100 ரூபாயைத் தாண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார்.

நேற்று முன்தினம் ஆந்திராவில் உள்ள அமராவதியில் செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, இப்போது ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு இந்த இரண்டும் பெரிய பிரச்சினைகளாக நமக்கு உள்ளது. மோடியின் ஆட்சியின் கீழ் விரைவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 100 ரூபாயாக உயர்ந்துவிடும்.

அதேநேரத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 100 ரூபாயாக வீழ்ச்சியடையும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் மோடி அரசு செய்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையையும் அவர் கடுமையாக விமர்சித்தார்.