விஸ்வாசம் படத்தை விட அதிக நேரம் உடைய படமாக பேட்ட படம் அமைந்துள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘பேட்ட’ மற்றும் சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விஸ்வாசம் ஆகிய 2 படங்களும் வருகிற 10ம் தேதி வெளியாக இருக்கிறது. எனவே, இந்த 2 படங்களுக்கும் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் 600 தியேட்டர்களில் பேட்ட படமும், 400 தியேட்டர்களில் விஸ்வாசமும் திரையிடப்படவுள்ளது. சமூக வலைத்தளங்களில் அஜித் ரசிகர்களும், ரஜினி ரசிகர்களும் ஒருவருக்கொருவர் மோதி வருகின்றனர்.

இதையும் படிங்க பாஸ்-  பொங்கலுக்கு 'விஸ்வாசம்' படத்துடன் வெளியாகும் மற்ற படங்கள்!

இந்நிலையில், விஸ்வாசம் படத்தை விட 20 நிமிடங்கள் அதிகம் உடைய படமாக பேட்ட வெளியாகிறது. விஸ்வாசம் படத்தின் மொத்த நீளம் 152.34 நிமிடங்கள் ஆகும். ஆனால், பேட்ட படத்தின் நீளமோ 171.54 நிமிடங்கள். அதாவது விஸ்வாசம் இரண்டரை மணி நேர படமாக இருக்கிறது. பெரும்பாலான படங்கள் இந்த அளவுக்குதான் எடிட் செய்யப்படும். அதற்கு மேல் ரசிகர்களை உட்கார வைப்பது சிரமம்.

இதையும் படிங்க பாஸ்-  சினிமா ஆசைக்காட்டி சிறுமியை சீரழித்த நடன ஆசிரியர் !

ஆனால், ரஜினி ரசிகரான கார்த்திக் சுப்புராஜ் பேட்ட படத்தை ரசித்து ரசித்து இயக்கியிருப்பதால் நிறைய காட்சிகளை எடுத்து, எடிட்டிங்கில் வெட்ட மனமின்றி அப்படியே வைத்துவிட்டதாக தெரிகிறது. ஏறக்குறைய 3 மணி நேர படமான ‘பேட்ட’ ரசிகர்களை கவருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.