பேட்ட படத்தில் இடம் பெற்ற ‘மரண மாஸ்’ பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து பொங்கலுக்கு வெளியான படம் பேட்ட. இப்படத்தில் பழைய துள்ளலான ரஜினியை கார்த்திக் சுப்புராஜ் காட்டியதால் இப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும், இப்படத்தில் இடம்பெற்ற ‘மரண மாஸ்’ பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

அனிருத், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆகியோர் இணைந்து பாடிய அப்பாடலுக்கு ரஜினி போட்ட குத்தாட்டம் களைகட்டியது.

இந்நிலையில், மரண மாஸ் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. இன்றுதான் இப்பாடலை சோனி மியூசிக் தன்னுடைய யுடியூப் சேனலில் வெளியிட்டது. அதற்குள் இதுவரை 10 லட்சம் பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.