கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தின் டிரெய்லர் நாளை காலை வெளியாகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ரஜினியின் பேட்ட படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு சென்சார் போர்டு யுஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.இப்படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தின் டீசரும் வைரல் ஹிட் ஆகியுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் 2019 புத்தாண்டு அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க பாஸ்-  அரை நிர்வாண கோலத்தில் லைவ் வீடியோ: இளம்பெண் அட்டூழியம்

ஆனால், வருகிற டிசம்பர் 28ம் தேதி பேட்ட படத்தின் டிரெய்லர் வெளியாகவுள்ளது. இந்த தகவலை சன் பிக்சர்ஸ் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தங்களின் டிவிட்டர் பக்கத்தில் ஏற்கனவே கூறியிருந்தனர்.

தற்போது இந்த தகவலை சன் பிக்சர் மீண்டும் உறுதி செய்துள்ளது. தனது டிவிட்டர் பக்கத்தில் நாளை காலை 11 மணிக்கு பேட்ட படத்தின் டிரெய்லர் வெளியாகும் என செய்தி வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  நாடி நரம்பு ரத்தம் இது எல்லாத்துலயும் ரஜினி வெறி ஊருன ஒருத்தனாலதான் முடியும்... பேட்ட டாக்!

இது ரஜினி ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தியுள்ளது.