ரஜினிக்கு வழக்கமான பில்டப்புகள் இந்த டிரெய்லரின் ஆரம்பத்தில் காட்டப்படுகிறது. இதையடுத்து இந்த காளியோட ஆட்டத்த பார்க்கத்தான போறீங்க என பழைய ரஜினியாக இந்த ட்ரெய்லரில் ரஜினி அறிமுகம் ஆகிறார்.

நவசுதீன் சித்திக், விஜய் சேதுபதி மெயின் வில்லன்கள். சப்போர்ட் வில்லனாக பாபி சிம்ஹா நடித்துள்ளார். பல படங்களின் மொரட்டு வில்லன்கள் பேட்ட படத்தில் சைடு வில்லன்களாக வலம் வருகிறார்கள். சிம்ரன் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். த்ரிஷாவுக்கு என்ன ரோல் என்பது தெரியவில்லை. ரஜினியின் கூடவே வரும் கதாபாத்திரத்தை சசிக்குமார் ஏற்று நடித்துள்ளார்.

ஹாஸ்டல் வார்டனாக இருக்கும் ரஜினி, விஜய் சேதுபதி கூட்டத்தை விரட்டி விரட்டி அடிக்கிறார். இதில்தான் டுவிஸ்ட் இருக்கும் என தெரிகிறது. பேட்ட படத்தில் விஜய்சேதுபதிக்கு மிக மாஸான ரோல் இருக்கும் என தெரிகிறது.

2.29 நிமிட டிரெய்லரில் ரஜினிதான் பெரும்பாலான காட்சிகளில் வருகிறார். கேட்டவுடன் புல்லரிக்க வைக்கும் பஞ்ச் வசனங்கள், பார்த்தவுடன் ஈர்க்கும் அழகு, ஸ்டைல் இதெல்லாம் நிஜமாகவே மரணமாஸ். ‘பார்க்கத்தான போறீங்க இந்த காளியோட ஆட்டத்த, ’சிறப்பான தரமான சம்பவங்களை இனிமேதான் பார்க்கப்போறீங்க’ என ரஜினி பேசும் இரண்டு வசனமும் நிச்சயம் பல ரசிகர்களை கைதட்ட வைத்திருக்கும்.