ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தின் டீசர் வீடியோவை நாளை காலை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் பேட்ட. இப்படத்தில் விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா, சிம்ரன், த்ரிஷா, சசிகுமார் என நடிகர் பட்டாளமே நடித்திருப்பதால் ரசிகர்களிடையே இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள மரணமாஸ் பாடல் யூடியூபில் வைரல் ஹிட். சமீபத்தில்தான் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதையும் படிங்க பாஸ்-  ரஜினியின் 'பேட்ட' பொங்கலுக்கு ரிலீசாவதில் தாமதமா?

நாளை டிச.12 ரஜினிக்கு பிறந்த நாள். எனவே, அவரின் பிறந்த நாள் பரிசாக பேட்ட படத்தின் டீசர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. இதனால், ரஜினி ரசிகர்கள் குஷி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க பாஸ்-  மரண மாஸை தொடர்ந்து வெயிட்டா வருது! நாளைக்கு வரைய வெயிட் பண்ணுங்க...