கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியாகவுள்ள பேட்ட படத்தின் தெலுங்கு ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பல வருடங்களுக்கு பின் ரஜினி ரசிகர்களை கவரும் வகையில் ‘பேட்ட’ படம் உருவாகியுள்ளது அப்படத்தின் டிரெய்லர் வீடியோவை பார்க்கும் போதே தெரிகிறது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக திரிஷா மற்றும் சிம்ரன் நடித்துள்ளனர். மேலும், விஜய் சேதுபதி, பாமிசிம்ஹா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். பொங்கல் விருந்தாக இப்படம் 10ம் தேதி வெளியாகவுள்ளது.

தமிழ் தவிர்த்து இப்படம் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகிறது. அந்த மாநிலங்களிலும் ரஜினிக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். ஹிந்தியில் பேட்ட படம் 10ம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில், தெலுங்கு ரிலீஸில் மட்டும் சிக்கல் ஏற்பட்டது.

காரணம், பாலகிருஷ்ணா நடிப்பில் என்.டி.ஆர் வாழ்க்கைப்படம், ராம்சரனின் வினய விதய ராமா, வருண் தேஜா நடிப்பில் எஃப் 2 உள்ளிட்ட படங்கள் சங்ராந்திக்கு ரிலீசாக காத்திருக்கிறது. எனவே, பேட்ட படத்திற்கு தியேட்டர்கள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, ஒருவாரம் கழித்து தெலுங்கு பேட்டையை ரிலீஸ் செய்யலாமா எனவும் ஆலோசனை நடக்கிறதாம். ஆனால், படக்குழு இன்னும் அதை உறுதி செய்யவில்லை.