பேட்ட படம் ரிலீஸான ஒரு தியேட்டர் காத்து வாங்கிய சம்பவம் தெரியவந்துள்ளது.

நேற்று வெளியான பேட்ட படம் ரஜினி ரசிகர்கள் மட்டுமில்லாமல் பொதுவான ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. நீண்ட வருடங்களுக்கு பிறகு பழைய ரஜினி ஸ்டைலை இப்படத்தில் பார்ப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். படம் நேர்மறையான விமர்சனத்தை பெற்று வருகிறது. அதேபோல், திரைத்துறையை சேர்ந்த பலரும் பேட்ட படத்தை டிவிட்டரில் கொண்டாடி வருகின்றனர். பேட்ட படத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பு ரஜினிக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  மாஸ் பக்கா மாஸ்... பேட்ட படத்திற்காக ரஜினி பேசிய டப்பிங் வீடியோ...

தமிழகமெங்கும் பேட்ட படம் வெளியான திரையரங்குகள் நேற்று ஹவுஸ்புல் ஆனது. அதேநேரம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் சாமுண்டி மற்றும் விஜயலட்சுமி இரு தியேட்டர்களிலும் நேற்று பேட்ட திரையிடப்பட்டது. ஆனால், 2 தியேட்டர்களிலும் மிகவும் சொற்பமானவ கூட்டமே இருந்தது. இதை புகைப்படம் எடுத்த சிலர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

இதையும் படிங்க பாஸ்-  மாரி 2 படப்பிடிப்பில் தனுசுக்கு விபத்து: அதிர்ச்சியில் ரஜினி குடும்பத்தினர் !

சில அஜித் ரசிகர்கள் ‘பேட்ட படத்துக்கு இதுதான் வரவேற்பு’ என கிண்டலாக கருத்து தெரிவித்து இந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.