பொங்கல் விருந்தாக ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் இரு படங்களும் வெளியாகியுள்ளது.

சிவாவின் இயக்கத்தில் விஸ்வாசமும், கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் பேட்ட படமும் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இரு படங்களையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இரு திரைப்படங்களும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதேநேரம், இருபடங்களுக்கும் கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க பாஸ்-  பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு எதிராக போலீசில் புகார்

தமிழகத்தில் 600 திரையரங்குகளில் பேட்ட படமும், 450 திரையரங்குகளில் விஸ்வாசம் படமும் திரையிடப்பட்டுள்ளது. பேட்ட படமும் வெளியான நேற்று ரூ.16 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், விஸ்வாசம் படமும் ரூ.16 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளாக தகவல் வெளிவந்துள்ளது. ஆனால், இவை அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை.. சென்னையில் பேட்ட படம் ரூ.1.12 கோடியும், விஸ்வாசம் ரூ.88 லட்சமும் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  அடேங்கப்பா...அஜித் மகளா இது- இந்த வீடியோவை பாருங்க

அதேநேரம், பிற மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திராவில் பேட்ட பட வசூல் விஸ்வாசத்தை விட அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதே நிலைதான் வெளிநாடுகளிலும் நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.