சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் படம் பேட்டை. முதல் கட்ட படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடந்து முடிந்தது.

முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து நீண்ட நாட்களுக்கு பிறகே படத்தின் பெயர் பேட்டை என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு லக்னோவில் நடைபெற்று வருவதாக தெரிகிறது.