தனுஷ் நடிக்கவுள்ள ‘மாரி 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய பாலாஜி மோகன் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் சாய்பல்லவி, வரலட்சுமி ஆகியோர் நாயகிகளாக நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல மலையாள நடிகர் டொவினோ தாமஸ் சமீபத்தில் இந்த படத்தில் இணைந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இவர் இந்த படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து வருவதாக தெரிகிறது

இந்த நிலையில் டொவினோ தாமஸ் நடித்த மலையாள திரைப்படமான அபியும் அனுவும்’ படத்தின் டீசர் நேற்று வெளியாகியுள்ளது. இந்த டீசரில் டொவினோ தாமஸ், நடிகை பியா பாஜ்பாய் லிப்கிஸ் இணையதளங்களை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது