இங்கிலாந்தின் தொலைக்காட்சி பிரபலம் பியர்ஸ் மோரகன் 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியர்கள் சின்ன சின்ன வெற்றிகளைக் கூட மிகையாகக் கொண்டாடுகிறார்கள் எனக் கேலியாகக் கூறினார்.  காமன் வெல்த் போட்டிகளின் போது இந்தியாவில் 120 கோடி பேரும் இரண்டு உலகக்கோப்பைகளை  மட்டுமேக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள் எனக் கூறி கேலி செய்தார். இதற்குப் பதிலளித்த சேவாக் ‘ இந்தியாவின் 9 கோப்பைகள் உள்ளன. நாங்கள் சின்ன சின்ன விஷயங்களைக் கூட கொண்டாடுவோம். ஆனால் கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து இன்னும் கோப்பையை வெல்லவில்லையே’ எனக் கூறினார்.

இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இங்கிலாந்து உலகக்கோப்பையை வென்றுள்ள நிலையில் அந்த டிவிட்டை குறிப்பிட்டு மோர்கன் ‘ஹாய் நண்பா’ எனக் கூறி சேவாக்கை மீண்டும் வம்புக்கு இழுத்துள்ளார்.