திரைப்படப் பின்னணிப் பாடகி வாணி ஜெயராமின் கணவர்
உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார்.

வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்த வாணி ஜெயராம் 1971-ஆம்
ஆண்டு ‘குட்டி’ என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் தனது
இசைப்பயணத்தைத் தொடர்ந்தார். இதைத் தொடர்ந்து தமிழ்,
தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில்
சுமார் 10,000 பாடல்களை பாடி உள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த வாணி ஜெயராம் திருமணத்திற்கு பிறகு
மும்பைக்கு குடியேறினார். ஆனால், தனது பாடும் திறமையை
வளர்த்துக் கொள்வதற்காகவே மீண்டும் தமிழகத்துக்கு வந்தார்.

இவருடைய கணவர் ஜெயராமன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். சோகத்தில் உள்ள வாணி ஜெயராமின் குடும்பத்திற்கு திரைத்துறையினர் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து
வருகின்றனர்.