பிரபல சாமியார் நித்தியானந்தாவின் ஆஸ்ரமத்திலிருந்து தனது மனைவியை மீட்டுத்தரும்படி மாவட்ட ஆட்சியரிடம் ஒருவர் மனு கொடுத்துள்ள சம்பவம் நாமக்கலில் நடந்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் நித்தியானந்தா நடிகை ரஞ்சிதா உடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியாகி தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அன்று முதல் நித்தியானந்தாவுக்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்மறையான பார்வையே உள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  மனைவி மற்றும் 3 அழகான குழந்தைகள் - கணவன் செய்த வெறிச்செயல்

மதுரை ஆதீனம் விவகாரத்திலும் நித்தியானந்தாவுக்கு எதிர்ப்பே கிளம்பியது. சமீபத்தில் நில அபகரிப்பு, கவிஞர் வைரமுத்து மீது நித்தியானந்தாவின் சிஷ்யைகளின் ஆபாச அர்ச்சனை என தொடர்ந்து நித்தியந்தாவின் பெயர் ஊடகங்களில் அடிபட்டுக்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் வடுகம் முனிப்பம்பாளையத்தை சேர்ந்த விவசாயியான ராமசாமி சில தினங்களுக்கு முன்னர் கலெக்டர் அலுவலகம் வந்து மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், 8 மாதங்களுக்கு முன்னர் பெங்களூரில் உள்ள நித்தியானந்தா ஆஸ்ரமத்துக்கு தனது மனைவி சென்றதாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  பாம்புத் தோல் லெக்கின்ஸ் பேண்ட் அணிந்த மனைவி- உண்மைப் பாம்பு என அடித்து காலை உடைத்த கணவர்

ஆனால் 8 மாதத்துக்கு முன்னர் சென்ற தனது மனைவி இன்று வரை வீடு திரும்பவில்லை என கூறியுள்ளார். மனைவியின் பெயரில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் கஷ்டப்படுவதாகவும், எனவே உடனே தனது மனைவியை மீட்டுத்தரும்படி கோரிக்கை வைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் ஈஷ மையத்தில் உள்ள தங்கள் இரண்டு மகள்களையும் மீட்டு தரும்படி கோவையை சேர்ந்த வயதான தம்பதிகள் வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.