Home அரசியல் பஜனை முன்னேற்றக் கழகம்: திமுகவை கிண்டலடிக்கும் ராமதாஸ்!

பஜனை முன்னேற்றக் கழகம்: திமுகவை கிண்டலடிக்கும் ராமதாஸ்!

திமுக தலைவர் கருணாநிதியின் சமாதியில் அஞ்சலி செலுத்த சென்ற திமுக முக்கிய தலைவர்கள் பஜனை பாடல்கள் பாடியதை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கிண்டலடித்துள்ளார்.

முன்னாள் முதல்வரும் திமுக தலைவராக 50 ஆண்டுகளாக இருந்தவருமான கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி மரணமடைந்தார். அவரது உடல் சென்னை அண்ணா சமாதியில் அடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து அவரது சமாதிக்கு தினமும் திமுகவினர் அஞ்சலி செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் அக்கட்சியினர் கருணாநிதி சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.

அப்போது, எங்கள் தலைவரே.. தங்கத் தலைவரே.. என்று அவர்கள் பாட்டுப் பாடினர். சிலர் வாத்தியங்களையும் இசைத்தனர். இது குறித்த செய்தி ஊடகங்களில் வெளியாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இதனை பாமக நிறுவனர் ராமதாஸ் கிண்டலடித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ள ராமதாஸ், இதுதான் பெரியார் வழிவந்தவர்களின் பகுத்தறிவுக் கொள்கையோ? வாழ்க பஜனை முன்னேற்றக் கழகம். கலைஞர் நினைவிடத்தில் திமுகவின் ஒரு பிரிவினர் பஜனைப் பாடல்களை இசைத்ததன் நோக்கம் என்ன தெரியுமா? பஜனையில் பயன்படுத்தப்படும் முக்கியமான இசைக்கருவியின் பெயர் என்ன? இரு கேள்விகளுக்கும் ஒரே பதில் தான் என கிண்டலடித்துள்ளார்.