அதிர்ஷ்டத்தில் மிதக்கும் தமன்னா

கோலிவுட்டில் கல்லூாி மற்றும் கேடி படத்தின் மூலம் நாயகியாக அடியெடுத்து வைத்தாா் நடிகை தமன்னா. இவா் பாகுபலி படத்திற்கு பிறகு நல்ல நடிகை என்ற இடத்தை பிடித்துள்ளாா். பாகுபலியின் வெற்றிக்கு பின் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறாா் இவா். தமிழ், தெலுங்கு என இரு மொழி படங்களில் இவா் பிரபலமாக இருந்து வருகிறாா்.

இதற்கிடையில் இவரது தம்பிக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்ததுது. நடிகை தமன்னா  தனது திருமண  விசயத்தை பற்றி கூறியுள்ளாா்.  இப்போதைக்கு நான் எனது திருமணத்தை பற்றி மனத்தை செலுத்தவில்லை. அதற்கான சாியான நேரம் வரும் போது செய்து கொள்வேன் என கூறினாா்.

இந்நிலையில் தற்போது conferderation of international accreditation commission என்ற அமைப்பு அவருக்கு கௌரவ டாக்டா் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. தமன்னாவின் ரசிகா்கள் தங்களது வாழ்த்துக்களை தொிவித்து வருகின்றனா்.