சென்னையில் ஒரு வீட்டில் பணிபுரியும் பணி பெண் குழந்தையை கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை செனாய் நகரை சேர்ந்தவர் அருள்ராஜ். இவரின் மூன்றரை வயது மகள் முகப்பேரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார். அதே வீட்டில் அம்பிகா என்ற பெண்ணும் பணிபுரிந்து வருகிறார் நேற்று பள்ளிக்கு சென்ற குழந்தை வீடு திரும்பவில்லை. அதோடு அருள்ராஜை தொடர்பு கொண்ட அம்பிகா உங்கள் குழந்தைகள் நாங்கள் தான் கடத்தி வைத்திருக்கிறோம். ரூ 60 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்தால் மட்டுமே குழந்தையை ஒப்படைப்போம். இல்லையேல் குழந்தையை கொலை செய்து விடுவோம் என மிரட்டி உள்ளார்.

எனவே அருள்ராஜ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக 3 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அம்பிகாவின் செல்போன் விவரங்களை சேகரித்து தனிப்படையினர் செங்குன்றத்தை சேர்ந்த முகமது கலிமுல்லா என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அம்பிகா கோவளத்தில் குழந்தையோடு பதுங்கியிருப்பது தெரியவந்தது இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் குழந்தையை மீட்டு பின் அம்பிகாவையும் கைது செய்தனர். கடத்தப்பட்ட 10 மணி நேரத்திற்குள் சென்னை போலீசார் குழந்தையை மீட்ட சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது.