ராஜஸ்தான் மாநிலத்தில் 23 வயது பெண்ணை மணந்த 60 வயது முதியவர் அந்தப் பெண்ணை கொடுமைப் படுத்து முத்தலாக் சொல்லியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தர்காவில் வேலை செய்யும் சலீமுதீன் எனும் 60 வயது முதியவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் 23 வயது இளம்பெண் ஒருவரைத் திருமணம் செய்துள்ளார். ஆனால் கல்யாணம் ஆகி முதல் மாதத்திலேயே அவர் அந்தப் பெண்ணைக் கொடுமைப் படுத்த ஆரம்பித்துள்ளார். இப்படியேக் கொடுமைகள் தொடர ஒருக் கட்டத்தில் முத்தலாக் சொல்லி அந்தப் பெண்ணை விவாகரத்து சொல்லியுள்ளார்.

இதையடுத்து அந்தப் பெண் போலிஸில் புகாரளிக்க விசாரணை மேற்கொண்ட போலிஸார் சலீமுதீனை கைது செய்துள்ளனர். முத்தலாக்க்குத் தடை விதித்து அண்மையில் மசோதா நிறைவேறியுள்ள நிலையில் அந்த சட்டப்பிரிவின் கீழ் சலீமுதீன் கைது செய்யப்பட்டுள்ளார்.