சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் ரவி. அங்கு டெய்லராக இவர் பணிபுரிந்து வந்தார். திருமணமாகிய இவரது மகன் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

ரவி வீட்டிற்கு எதிரில் தந்தையை இழந்த சிறுமி, தனது தாயாருடன் பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். சிறுமியின் தாய் வீட்டு வேலை செய்து மகளை படிக்கவைத்து வருகிறார்.

சம்பவ தினத்தன்று ரவியின் மனைவி, மகனின் குழந்தை பார்க்க சென்றுள்ளார். இதனைப் பயன்படுத்திக் கொண்ட ரவி, எதிர்வீட்டில் இருந்த 11வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இதனைக் கண்டு சந்தேகமடைந்த அங்கிருந்த ஒரு இளைஞர், சிறுமியின் குடும்பத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதனையடுத்து, அந்த ரவியின் வீட்டிற்கு சென்றுபோது, சிறுமியின் அலறல் சத்தம் கேட்டதையடுத்து, இளைஞர் கதவை திறக்கும்படி சத்தம் போட்டுள்ளார். ஆனால் கதவு திறக்காமல் இருந்தது. சத்தம் கேட்டு வெளியேவந்த அக்கம்பக்கத்தினர் சம்பவத்தை அறிந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது, ரவி சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளது தெரியவந்ததையடுத்து, அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அச்சிறுமியை மீட்டு, போலீஸ்க்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ரவியை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, அவரின் மொபலை செக் செய்து பார்த்தபோது, ஆபாச விடியோக்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதைக் காண்பித்துதான் சிறுமியிடம் கொடூரமாக நடந்துள்ளார் என தெரியவந்தது. இதனையடுத்து, சிறுமியிடம் கேட்டபோது, அவர் கூறியதைக் கேட்டு காவல்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கல்லுாரி மாணவர் ஒருவர் கொடுத்த தகவலால் சிறுமி காப்பாற்றப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.