சினிமா வாய்ப்பு – இளம்பெண்ணிடம் அத்து மீறிய தயாரிப்பாளர் கைது

08:16 காலை

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி, இளம்பெண்ணை பாலியல் தொல்லைக்கு உட்படுத்திய கன்னட சினிமா தயாரிப்பாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Loading...

2004ம் ஆண்டு வெளியான ‘ப்ரீதிமாயே ஹுஷாரூ’ என்ற கன்னட படத்தை தயாரித்தவர் விரேஷ். இவரிடம் ஒரு இளம்பெண் சினிமா வாய்ப்பு கேட்டுள்ளார். அவருக்கு வாய்ப்பு கொடுப்பதாக விரேஷ் உறுதியளித்திருந்தார்.

இந்நிலையில், கடந்த புதன் கிழமை அந்த இளம்பெண் அவரது வீட்டில் தனியாக இருந்தபோது விரேஷ் அங்கு சென்றுள்ளார். அவரிடம் சினிமா பற்றி பேச தொடங்கிய விரேஷ், மெல்ல மெல்ல அப்பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியான அந்த பெண், அவரிடமிருந்து தப்பி வீட்டின் வெளியே ஓடி, கதவை மூடி தாழ்பாள் போட்டு விட்டு, அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினருக்கு இதுபற்றி தெரிவித்தார்.

இதையடுத்து அங்கு விரைந்த அப்பெண்ணின் உறவினர்களும், அக்கம் பக்கத்தினரும் விரேஷிற்கு தர்ம அடி கொடுத்ததோடு, இதுபற்றி போலீசாரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

(Visited 18 times, 1 visits today)
The following two tabs change content below.
மகாலட்சுமி
இவர் இணையதள செய்திகள் பிரிவில் 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். சினிமா மட்டுமல்லாமல் தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சம்பவங்களை உடனுக்குடன் கொட்டுப்பதில் முதன்மையானவர். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிப்பெயர்ப்பதில் சிறப்பு புலமை வாய்ந்தவர். சினிமா துறையில் முக்கிய நிகழ்வுகள் மற்றும் பழம்பெரும் நடிக- நடிகைகள், இயக்குனர்கள் குறித்த சுவையான சம்பவங்களை தொகுத்து சிறப்பு கட்டுரைகளாக வழங்குவதில் பெயர் பெற்றவர். தொடர்புகொள்ள- mahamurugan@gmail.com