மதுரையில் கடந்த வாரம் போலிஸ் ஒருவர் லத்தியால் தாக்கியதால் விவேகானந்தகுமார் என்பவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.

மதுரை எஸ் ஆலங்குளத்தை சேர்ந்தவர் விவேகானந்த குமார். கடந்த வாரம் ஜூன் 15 ஆம் தேதி டூவீலரில் சென்ற அவர் ஹெல்மெட் போடாமல் சென்றுள்ளார். அதனால் காவல்துறை அதிகாரி ஒருவர் அவரை நிறுத்த முற்பட விவேகானந்த் வண்டியை நிறுத்தாமல் சென்றுள்ளார்.

அதனால் கோபமான காவலர் அவர் மேல் லத்தியை தூக்கி அடித்துள்ளார். இதனால் கீழே விழுந்த விவேகானந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த அவரது மனைவி கஜபிரியா தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர்களின் ஒன்றரை வயது குழந்தையான சாய் அவின்  தாய், தந்தையின் ஆதரவு இல்லாமல் தவிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.